5:42 PM | Posted in ,
கடந்த இரண்டு மாதங்களாக அடைக்காக்கச் சென்றிருந்த இந்த மாடப்புறா இன்றிலிருந்து மீண்டும் சிறகடிக்கத் தொடங்குகிறது (இதைச் சொல்வதற்கு வளவளவென்று நீண்ட பதிவையா எழுதனும்?).




தமிழீழ விடுதலைப்போரில் உயிர்நீத்த தமிழ் மக்களுக்கும், தமிழீழ மண்ணில் வீர வித்தாக விதைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்போரளிகளுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் சோகங்களையும் பகிர்ந்து கொள்ளவும், இலங்கை அரசின் இன அழிப்பைக் கண்டிக்கவும் நாளை 24-05-2009 காலை 10.00 - 1.00 மணிவரை பத்து மலையில் அலையென திரள்வோம். மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு சார்பற்ற பொது இயக்கங்களின் ஆதரவுடன் இந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணிந்து வாருங்கள்; குடும்பத்தோடு வாருங்கள்; நமது தார்மீக ஆதரவை போரில் பாதிக்கப்பட்டு அவதியுறும் மக்களுக்கு காட்டும் பொருட்டு திரண்டு வாருங்கள்.

மலேசிய நாட்டு காவல்துறையினரின் அச்சுறுத்தல்களும் கயவர்களால் கட்டவிழ்க்கப்பட்ட வதந்திகள் அதிகம் பரவலாம். இந்நாட்டு காவல்துறை என்றுதான் நடுநிலையாக நடந்து கொண்டிருக்கிறது? அச்சுறுத்தல்களை களைவது விடுத்து அச்சுறுத்தல்களை பரப்பிவிடுவதே கடந்த காலங்களில் அவர்களின் சாதனைகளாக நாம் பார்த்திருக்கிறோம். இம்முறையாவது வெந்த புண்ணில் வேலைப் பாச்சமாட்டார்கள் என நம்புவோம்.

வாருங்கள்; நம் உறவுகள் உடலறுந்து, உடை இழந்து, உணவிழந்து, உறக்கம் இழந்து தவிக்கின்றது. உங்களுக்கும் இது நேரலாம். அரசியல் வேற்றுமைகளை புறந்தள்ளுங்கள்; ஒன்றிணைந்து குரல் கொடுங்கள்.


SUNDAY 24 MAY 2OO9 - BATU CAVES - TIME 10.00 AM TO 1.00 PM


8 comments:

Sathis Kumar said...

வாழ்த்துகள் நண்பரே,

எதிர்வரும் 19-ஆம் திகதி சூலை மாதம் திரு.உதயாவின் நிகழ்வு ஒன்று கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் நடைப்பெறும் வாய்ப்பு உள்ளது. மீண்டும் உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும் என நம்புகிறேன். உடன் கிருஷ்ணா அவர்களையும் சந்திக்க நேர்ந்தால் மிக்க மகிழ்ச்சி.

Anonymous said...

vallthukal.

குமரன் மாரிமுத்து said...

தங்கள் வருகைக்கு நன்றிங்க நண்பர் சதீசு அவர்களே.

கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு எப்போ வரீக'ன்னு தந்தி அனுப்பிடுங்க. நான் நண்பர் கிருட்ணாவை அல்லேக்கா தூக்கிட்னு வந்துடரேன்.



பெயர் தெரிவிக்காத 'அந்த உலவிக்கும்' எமது நன்றி.

கிருஷ்ணா said...

இம்முறை நிச்சயம் வருகிறேன் நண்பரே..

கிருஷ்ணா said...

குமரா.. குமரியல்ல நான்.. தூக்கிப்போக நினைத்து 'பின்னால்' வெறுத்துவிட்டால் நான் பொறுப்பல்ல! ஹஹ

மு௫கனடிமை said...

ஓம் மு௫கா! உன் தி௫வ௫ளே துணை!

நன்றியுடன்,
மு௫கனடிமை


http://eegarai.darkbb.com/-f8/---t2486.htm#13265

மு௫கனடிமை-இந்தியா said...

மு௫கா! உன் க௫ணையே பெ௫ங்க௫ணை!

நன்றியுடன்,
மு௫கனடிமை
தூத்துக்குடி
இந்தியா

முருகனடிமை சரவணன் said...

முருகனை நினை மனமே
நலங்கள் பல தரும் முருகனை நினை மனமே

நன்றியுடன்

முருகனடிமை சரவணன்
சார்டர்ட் அக்கௌண்டன்ட்