மு.கு : இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளாக பதிவேற்றப்படும்.


பகுதி 1

1. பொது

இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே சிலருக்கு வாந்தி வருவதைப்போல் தோன்றும்; வேறு சிலருக்கு உடம்பில் மயிர் சிலிர்த்து நிற்கும் காரணம் அதன் அருவறுப்புமிக்கத் தோற்றம்தான்; மற்றும் சிலரின் சிந்தனையில் இந்த அர்ப்ப உயிரினத்தையும் பணமாக்க முடியுமா என்ற கேள்வியும் மூளையைத் துளைத்துக் கொண்டிருக்கும். ஒரு சிலருக்கு மட்டுமே அட்டையின் நன்மைகளும் அதன் பொருளாதார வலிமையும் இந்நேரம் புரிந்திருக்கும்.

மலேசியாவில் பொறுத்தவரையில் கடந்த ஓராண்டு காலமாக பயனற்றுக்கிடந்த அட்டைகளுக்கு எழுந்த மதிப்பு சொல்லில் அடங்காது. வார இறுதியில் நாளிதழ்களைத் திறந்தால் நிச்சயம் அட்டை வளர்ப்புப் பயிற்சிகளைப் பற்றியத் தகவல்களும் விளம்பரங்களும் தவறாது இடம்பெறுவதைக் காணலாம். அப்பயிற்சிகளில் கொடுக்கப்படும் அட்டை வளர்ப்பு தொடர்பான தகவல்களின் நம்பகத்தன்மையை ஆராய்வதும், அட்டை வளர்ப்பை சுயதொழிலாகச் செய்ய முன்வரும் இளைஞர்களுக்குச் சிறிய அளவிலான அடிப்படைத் தகவல்களைத் தொகுத்துத் தரும் களமாகவும் இந்தக் கட்டுரை அமைந்திருக்கும்.


2. அட்டை - பொதுவான தகவல்கள்

அட்டைகள் மற்ற உயிரினங்களின்பால் அண்டி அதன் குருதியை உறிந்து வாழும் ஓர் உயிரினம். நையப் புடைக்க உறிந்து களித்தப்பின் தனது இனப்பெருக்கத்தில் தீவிரம் காட்டுவதுதான் அட்டைகளின் இயல்பு.

உலகில் மொத்தம் 650 வகை அட்டைகள் இருப்பதாக ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர். அவை அளவிலும், தோற்றத்திலும் மாறுபட்டிருக்கும். மலேசியாவில் பல வகை அட்டைகள் காணப்பட்டாலும் இரண்டு வகை அட்டைகள் மட்டுமே பெருமளவில் வணிப நோக்கத்துக்காக வளர்க்கப்படுகின்றன. அவை European
Medicinal Leech (Hirudinaria Manliness) - Green and Brown. பச்சை நிறத்திலான அட்டைகள் நதியோரங்களிலும் குளத்தோரங்களிலும் வழக்கமாகக் காணப்படுகின்றன. சாக்லெட் நிறத்திலான அட்டைகளை வழக்கமாக வயல்வெளிகளிலே காணலாம். வழக்கு மொழியில் நாம் இதனை மாட்டு அட்டைகள் என்று அழைக்கிறோம்.

அட்டைகள் மெலிந்து சிறியதாக இருந்தாலும், ஓர் புள்ளியிலிருந்து அடுத்த புள்ளிக்குத் தாண்டும் போது அதன் உடல் நீண்டு விரிந்து (elastic) கொடுக்கிறது (2 மடங்கு).

அட்டைகளுக்கு கண்கள் கிடையாது. அதனால்தானோ என்னவோ, அது நல்லவன் கெட்டவன் என்று பார்ப்பதே இல்லை.

அட்டைகள் கூடிய வரை இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வாழக்கூடியன. ஒவ்வொரு அட்டையும் தனது வாழும் காலத்தில் சராசரி 30-லிருந்து 300 முட்டைகள் வரை இடும். ஒவ்வொரு அட்டையும் முட்டை இடும் தன்மை கொண்டது. ....புரிகிறது.. ஆண் அட்டையும் முட்டை இடுமா என்று யோசிக்கின்றீர்களா? ஒவ்வொரு அட்டையும் இருபால் உறுப்புகள் கொண்டவை. அவையே ஆணாகவும் பெண்ணாகவும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தன்னை மாற்றிக்கொள்ளும்.


தொடரும்....

பி. கு:
தயவு கூர்ந்து சாக்லெட் என்பதற்கு சரியான தமிழ்ச் சொல்லை தந்து உதவவும்.

பகுதி 2
3. வாழ்விடம்
4. உணவு
5.வளர்ப்புத் தொட்டிகள்

பகுதி 3
6.பயன்பாடு
7.பொருளியல் ஆய்வு
8.எனது கருத்து

7 comments:

Sathis Kumar said...

பயனுள்ள தொடர்.. மிக்க நன்றி.

நானும் பகுதி நேரமாக அட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறேன். நாளுக்கு நாள் போட்டா போட்டி அதிகரித்து வருகிறது. இருப்பினும், திட்டமிட்டு விவேகமாக செயல்பட்டால் நல்ல வருமானத்தை ஈட்டலாம்..

Anonymous said...

chocolate = காவிக்கண்டு (ஆக்கம்: சொல்லறிஞர் அருளி)

குமரன் மாரிமுத்து said...

திரு. சதீசு அவர்களுக்கு நன்றி.

//நாளுக்கு நாள் போட்டா போட்டி அதிகரித்து வருகிறது//

வணிபத்தின் அடிப்படையே 'ஒன்றை' போட்டு அதைப் பன்மடங்காக எடுப்பதுதானே! அதனால்தானோ, 'போட்டால் போட்டி' வருகிறது!!

அடுத்தடுத்த பகுதிகளையும் படிக்கத் தவறாதீர்கள்.

குமரன் மாரிமுத்து said...

நல்ல தமிழ்ச் சொல்லை தந்து அடையாளம் காட்டிக்கொள்ளாத அந்த நல்லுள்ளத்திற்கும் எனது நன்றி.

கிருஷ்ணா said...

சதீசு குமார் அட்டை வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதாக சொல்கிறாரே.. அவரிடம் விசாரித்தீரா? யாரிடம் விற்கிறார் என்று? தெரிந்தால்.. நானும் அட்டைகளை அடைகாப்பேன்..!

குமரன் மாரிமுத்து said...

சதீசு அண்ணாச்சியிடம் கேட்டுச் சொல்கிறேன். அதுவரை அட்டைகளை அடைகாக்க வேண்டாம்; அட்டை முட்டைகளை அதிகரிக்கும் வழிவகைகளைக் கண்டறிக கிருட்ணா அவர்களே....

கிருஷ்ணா said...

முட்டைகளை அதிகரிக்க வேண்டியது அட்டைகள் தானே! நாம் என்ன செய்ய முடியும்?!!! இந்த அட்டைகளை வைத்து அப்படி என்னதான் செய்கிறார்கள்??? அதையும் எழுதுங்களேன்..