நூல் வெளியீடு


நூல்: சயாம்-பர்மா மரண இரயில்பாதை-மீட்க்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு


ஆசிரியர்: சீ. அருண் (கிள்ளான்)
கைபேசி :012 3002911


நூல் வெளியிடப்படும் இடங்கள்


இடம் :நெகிரி மாநில ம.இ.கா மண்டபம்
நாள் : 22-02-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : மாலை மணி 5.00


இடம் :கோலாசிலாங்கூர் ஆலய மண்டபம்
நாள் : 01-03-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00


இடம் :கிள்ளான் சுந்தரராச பெருமாள் ஆலய மண்டபம்
நாள் : 15-03-2009 (ஞாயிறுக்கிழமை)
நேரம் : பிற்பகல் மணி 2.00


இந்த நூல் தூசு அண்டிக்கிடக்கும் ஒரு பாவப்பட்ட சரித்திரத்தை பல ஆண்டுகளுக்குப் பிறகு தட்டி, சுத்தம் செய்து, தமிழர்கள் பட்ட இன்னல்களை உலகத்துக்கு எடுத்துரைக்கும் நூலாகக் கருதப்படுகிறது.


உலகிலேயே மிகவும் மோசமான தொடர்வண்டி தண்டவாளம் என்றால் அது நிச்சயமாக 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை'யாகத்தான் இருக்க முடியும். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்ட இத்தண்டவாளம், 15 மாதங்களிலே பயங்கர காடுகளை அழித்து, மலைகளைக் குடைந்து பூர்த்தி செய்யப்பட்டது.


நவீன இயந்திரங்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படாத அக்காலக்கட்டத்தில் குறித்த காலத்துக்கு முன்னதாகவே வேலைகள் முடிக்கப்பட்டது பெருமைதான். ஆனால், இந்த தண்டவாளத் திட்டம் தொடங்கிய நாள் முதல் முடியும் நாள் வரை மடிந்த மனித உயிர்கள்தான் எத்தனை? எத்தனை? சிதைந்த குடும்பங்கள்தான் எத்தனை? எத்தனை?


நம் மலேசியத் தமிழர்களுக்கும் இந்த 'சயாம்-பர்மா மரண இரயில்பாதை'க்கும் அணுக்கமான தொடர்பு உள்ளது. மலேசியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டவர்களில் பெரும் பகுதியினர் தமிழர்களே. அவர்களின் கதைகளை நம் பெற்றோர்கள் வாயிலாகவும் உயிரோடு திரும்பிவந்த சில தாத்தா-பாட்டிகள் வாயிலாகவும் கேட்டிருக்கிறோம். ஆனால், நாளைய தலைமுறைக்கு இவையாவும் கதைகளாகவே போய்விடும்.


சரித்திர நிகழ்வுகளையும் சான்றுகளையும் ஆவணப்படுத்தாமையால் தமிழர்கள் இழந்தது பல. காலங்கடந்து வரலாற்றுச் சான்றுகளைத் தேடிப்பிடிப்பது மிகவும் சிக்கல் நிறைந்த வேலை. பல காலம் செய்த ஆய்வின் வழி, தேடி எடுத்த சான்றுகளை புத்தகமாக வெளியிடும் முயற்சி பாராட்டுக்குறியது; போற்றத்தக்கது.


எழுத்தாளர்களுக்கு ஊக்க மருந்தே நூல் விற்பனைதான். இதுபோன்ற சிறந்த நூல்கள் மேலும் வெளிவர வேண்டுமானால் வாசகர்கள்தான் தோல் கொடுக்க வேண்டும்.

6 comments:

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

சண்முகம் என்ற மலேசியத் தமிழ் எழுத்தாளர் எழுதிய சயாம் மரண ரயில் என்ற புத்தகம் ஏற்கனவே இந்தப் நிகழ்புலத்தில்தான் எழுதப்பட்டிருக்கிறது.

பதிவில் எழுத்துப்பிழைகளைத் திருத்தவும்.

Anonymous said...

வணக்கம்.

Anonymous said...

வணக்கம்.நண்பர் அறிவன் கருத்தில் தவறு உண்டு. திரு.சண்முகம் அவர்கள், 'சயாம் மரண ரயில்- சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்' என்னும் தலைப்பில் நாவல் எழுதியுள்ளார். 2007ஆம் ஆண்டில் இந்நூல் தமிழகத்தில் மறுபதிப்பு அச்சடிக்கப்பட்டது. இந்நூலுக்கு நான் அணிந்துரை எழுதியுள்ளேன்.
சயாம் மரண ரயில் பாதை வரலாறு பற்றி தமிழில் வெளிவரும் முதல் வரலாற்று நூல் 'சயாம் மரண ரயில்-மீட்கப்பட்ட வரலாற்றின் உயிர்ப்பு' என்னும் நூல்தான் என்பதை அறிக!
அன்புடன்,
அருண்-கிள்ளான்.

குமரன் மாரிமுத்து said...

திரு. அறிவன் அவர்களின் வருகைக்கு நன்றி.

தங்களின் தகவல் நூலாசிரியருக்கு தெரிவித்திருந்தேன். அவரின் மறுமொழியும் காண்க.

எழுத்துப்பிழைகளை தெளிவுபடுத்தினால் என்னை வளப்படுத்திக்கொள்வேன்.

மீண்டும் நன்றி.

குமரன் மாரிமுத்து said...

அருண் அவர்களே வருக! வருக!

தங்களின் தகவலுக்கு நன்றி.

Anonymous said...

வணக்கம். நான் நூலினைப் படித்தேன். வியந்துபோனேன். 187 பக்கங்களுக்கு எழுதப்பட்டுள்ளது. பல அரிய படங்கள் உள்ளன. எல்லாராலும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல்.

நவமணி - சுபாங்