ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும் - இவன்
வாழும் தரித்திரம்...
ஆண்டொன்று பிறந்தால்
வழி நூறு பிறக்கும் - இவன்
இறந்தும் சரித்திரம்...
நீ
தரித்திரமா?
சரித்திரமா?
பழங்கதைகள் பேசிப் பேசி
புளிச்சிப் போச்சி சமுதாயம்...
சரிந்த சரித்திரத்தைப்
புரட்டிப் பார்த்தால்
மிஞ்சியது பெருங்காயம்...
உன் கண்களுக்கு எதிரி
உன் விரல்களே...
உனது உரிமைகள் மட்டுமல்ல
உள்ளாடைகளும் களவாடப்பட்டுவிடும்
விழித்துக்கொள்...
சரித்திர ஏடுகள்
உன்னை பதிவு செய்ய
காத்திருக்கின்றன...
நேற்றைய தோல்விகளோடு
நாளைய பாதையை செதுக்காதே...
தோல்விகளில் பாடம் படி
உன்னை புதுப்பித்துக்கொள்...
ஆண்டுக்கு ஒருமுறை
தன்னைப் புதுப்பிக்கும் மரங்களே
அதிக விளைச்சல் தருகிறது..
விருட்சமாய் எழுந்திடு
தடைகளை (வீணர்களை) சாய்த்திடு...
நமக்கும் விடியும்
புத்தாண்டில் உதயம்...
எமது 2009 இனிய உலகப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
1 comment:
வணக்கம் குமரன்.
புதிதாக வலைப்பதிவு தொடங்கியிருக்கும் உங்களுக்கு முதலில் என்னுடைய கனிவான வரவேற்பை நல்குகிறேன்.
உங்கள் மாடப்புறா வலையுலகில் சிறகடித்துப் பறந்திட மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
தரமான பதிவுகளின் வழி மலேசியத் தமிழ் வலையுலகச் சோலையைச் செழிக்கச் செய்வீர்கள் என நம்புகிறேன்.
எடுத்த எடுப்பிலேயே காதல் கத்திரிக்காய் என்று சிலர் எழுதத் தொடங்குகிற இந்தக் காலத்தில்.. ஓர் இளைஞராக இருந்தாலும் சமுதாய நோக்கோடு அருமையான உரைவீச்சுடன் தொடங்கியிருக்கும் உங்கள் உள்ளத்தை உண்மையிலேயே பாராட்டுகிறேன்.
//பழங்கதைகள் பேசிப் பேசி
புளிச்சிப் போச்சி சமுதாயம்...
சரிந்த சரித்திரத்தைப்
புரட்டிப் பார்த்தால்
மிஞ்சியது பெருங்காயம்...//
>>சமுதாயத்தில் கண்ட வேதனை..
//உன் கண்களுக்கு எதிரி
உன் விரல்களே...
உனது உரிமைகள் மட்டுமல்ல
உள்ளாடைகளும் களவாடப்பட்டுவிடும்//
>>சமுதாயத்திற்கு எச்சரிக்கை..
//விழித்துக்கொள்...
சரித்திர ஏடுகள்
உன்னை பதிவு செய்ய
காத்திருக்கின்றன...//
>>சமுதாயத்திற்குத் தன்னம்பிக்கை..
//நேற்றைய தோல்விகளோடு
நாளைய பாதையை செதுக்காதே...
தோல்விகளில் பாடம் படி
உன்னை புதுப்பித்துக்கொள்...//
>>சமுதாய எழுச்சிக்கான திறவுகோள்..
இப்படி சமுதாயத்தைச் சிந்தித்துச் செதுக்கியிருக்கும் உங்கள் வரிகள் நன்று!!
உங்களுக்குக் கவிதை உள்ளம் இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.. வானுயர வாழ்த்துகள்!
அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்
Post a Comment