ஆண்டொன்று போனால்
வயதொன்று போகும் - இவன்
வாழும் தரித்திரம்...
ஆண்டொன்று பிறந்தால்
வழி நூறு பிறக்கும் - இவன்
இறந்தும் சரித்திரம்...
நீ
தரித்திரமா?
சரித்திரமா?
பழங்கதைகள் பேசிப் பேசி
புளிச்சிப் போச்சி சமுதாயம்...
சரிந்த சரித்திரத்தைப்
புரட்டிப் பார்த்தால்
மிஞ்சியது பெருங்காயம்...
உன் கண்களுக்கு எதிரி
உன் விரல்களே...
உனது உரிமைகள் மட்டுமல்ல
உள்ளாடைகளும் களவாடப்பட்டுவிடும்
விழித்துக்கொள்...
சரித்திர ஏடுகள்
உன்னை பதிவு செய்ய
காத்திருக்கின்றன...
நேற்றைய தோல்விகளோடு
நாளைய பாதையை செதுக்காதே...
தோல்விகளில் பாடம் படி
உன்னை புதுப்பித்துக்கொள்...
ஆண்டுக்கு ஒருமுறை
தன்னைப் புதுப்பிக்கும் மரங்களே
அதிக விளைச்சல் தருகிறது..
விருட்சமாய் எழுந்திடு
தடைகளை (வீணர்களை) சாய்த்திடு...
நமக்கும் விடியும்
புத்தாண்டில் உதயம்...
எமது 2009 இனிய உலகப் புத்தாண்டு நல் வாழ்த்துகள்.